பாப்பிரெட்டிப்பட்டி மலர் இராமலிங்கம் மறைவு.. மருத்துவர் இராமதாஸ் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


பாப்பிரெட்டிப்பட்டி மலர் இராமலிங்கம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் தொடக்க கால நிர்வாகிகளில் ஒருவரான மலர் இராமலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே சங்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றியவர் மலர் இராமலிங்கம். தொடக்கத்தில் வன்னியர் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளராக பணியாற்றியவர் பின்னர் ஒருங்கிணைந்த தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போதும் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக 2000-ஆவது ஆண்டு வரை தொடர்ந்தார். அதன்பின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். பாமக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்.

வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஒரு நாள் சாலைமறியல் போராட்டம், ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டம், தொடர் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர்.  கடந்த 2019&ஆம் ஆண்டு நடைபெற்ற எனது முத்து விழாவில் கலந்து கொண்டார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். என்னுடன் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Regret to Dharmapuri Pappireddipatti PMK Malar Ramalingam Passed Away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->