அனைத்தையும் பிடுங்கி எறிந்து விடலாமா? விரக்தியின் விளிம்பில், கட்டாய ஒய்வு தான் வழி! பொறுமை இழந்த டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


"தைலாபுரம் தோட்டத்திலுள்ள BSNL  தொலைபேசி இணைப்பு அடிக்கடி பழுதடைந்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன்.அதை தொடர்ந்து வந்த அதிகாரிகள்  சரி செய்தனர். அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பழுதாகிவிட்டது. பழுதடைவதில் வேகம் என்றால் அது பிஎஸ்என்எல் நிறுவனம் தான். 

உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள். அந்த வரிசையில் பிஎஸ்என்எல் சேவை மட்டும் தான் மாறாதது.... தேறாதது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை வெறுக்க வைக்கும் வகையில் மோசமான சேவைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல்! 

நான் தரைவழி தொலைபேசியை நேசிப்பவன். ஆனால், எனது இல்லத்தில் உள்ள பிஎஸ்என்எல் தரைவழி இணைப்புகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து விடலாமா? என்ற அளவுக்கு அதன் சேவை என்னை சோதிக்கிறது. இதே நிலை நீடித்தால் BSNL ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் கட்டாய ஓய்வு நிச்சயம்" என டாக்டர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr ramadoss face the continue issue in BSNL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->