SC பட்டியலின வெளியேற்றம்! ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர்களின் விருப்பம்!  - Seithipunal
Seithipunal


“SC  பட்டியலில் இருந்து வெளியேற்றுவது ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் விருப்பம். இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்,'' என மதுரையில் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஆங்கிலேயர் காலத்தில் பள்ளன், குடும்பன் உள்ளிட்ட ஏழு பிரிவினர் அடங்கிய தேவவேந்திர குல வேளாளரை SC பட்டியலில் சேர்த்து விட்டனர். இதனால் இச்சமூக மக்களுக்கு பெரியளவில் பயன் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே மத்திய, மாநில அரசு பதவிகளில் உள்ளனர். அதுவும் இடஒதுக்கீடு முறையில் அவர்கள் வரவில்லை. தங்களது தனிப்பட்ட திறமையால் வந்துள்ளனர். 

மீதம் 99% உள்ள இச்சமூகத்தினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் SC, தலித் போன்ற பழிகளை மட்டும் சுமக்கின்றனர். பொது தளங்களில் மற்ற சமூகத்தினருடன் பழக முடிய வில்லை. இது இச்சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. இதுகுறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தால் போதும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் புதிய தமிழகம் சார்பில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடும்.

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பங்கேற்க முடியாதபடி அரசு பலத்த கெடுபிடிகளை செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமையுள்ளது, என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Krishnasamy Speech in Madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->