வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு | மே மாதம் இறுதியே இறுதி! அடுத்து என்ன? அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். பீகார் முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனை இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 

ஆளக்கூடிய பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. அந்த எண்ணமே அவர்களுக்கு கிடையாது. ஆனால் சமூக நீதி பேசுகின்ற தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியாக வேண்டும். ஸ்டாலினிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதே நேரத்தில் 10.5% உள் ஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு காரணம் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாப்பதற்கு மட்டுமே தேவை" என்றார்.

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள், இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 

இவர்களுக்கு ஒரே வழி நீதிமன்றம். இவர்கள் நிறைவேற்றிய சட்ட மசோதாவும் மத்திய அரசிடம் தான் உள்ளது. அவர்கள் அதை அப்படியே வைத்திருக்க போகிறார்கள். அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நீதிமன்றத்தை வேறு விதமாக அணுகி தான் இதற்கு தீர்வு காண வேண்டும். 

இப்போது இருக்கும் ஒரே ஒரு நன்மை என்னவென்றால், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீடு ஒன்றுதான்" என்றார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு பாமக நடத்திய போராட்டத்தில், 21 உயிர்களை ஒரே நாளில் பலி கொடுத்து, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்த இட ஒதுக்கெட்டில் தற்போது 115 சமூகங்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால், அதில் வன்னியர்கள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் டிஎன்பிசி குரூப்-1 குரூப் 2 குரூப் 3 குரூப் 4 இந்த நான்கு தேர்வுகளின் மூலம், எம்பிசி இடஒதுக்கீட்டில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எந்தெந்த பதவிக்கு சென்றுள்ளார்கள் என்ற புள்ளி விவரங்களை கொடுங்கள் என்று கேட்டோம். 

இதை எடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும். எங்களிடம் ஆட்சி இருந்தால் இதை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால், இதை எடுப்பதற்கு முந்தைய ஆட்சியாளர்களுக்கும் மனது வரவில்லை. இன்றைய ஆட்சியில் இருப்பவர்களுக்கும் மனதில்லை.

அப்புறம் எப்படி இவர்கள் சமூக நீதியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? நேற்று சமூக நீதி கூட்டம் நடத்துகிறார்கள். நடத்தட்டும் ஆனால், இங்கு தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லையே? உச்சநீதிமன்றம் 10.5 உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சரியா ஓர் ஆண்டு ஆகிறது. இந்த ஒரு ஆண்டு ஆகியும் எதுவும் நடக்கவில்லை

இது சாதி பிரச்சினையில்லை. சமூக நீதிப் பிரச்சனை. சமூக நீதிப் பேசுகின்ற அரசாங்கம், உண்மையில் சமூக நீதி மீது அக்கறை இருந்தால், இன்னும் ஒரு மாத காலத்திற்குள், சட்டமன்றத்தில் சட்ட கொண்டு வர வேண்டும். சமூக நீதி நிலைநாட்ட வேண்டும். இந்த சட்டம் யாருக்கும் எதிரானது இல்லை.

வருகின்ற மே மாதம் இறுதிக்குள் இந்த 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், எங்களுக்கு தெரிந்தது போராட்டம் மட்டும் தான். போராட்டம் என்றால் சமூக நீதிப் போராட்டம். 

20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகம் மட்டும் அல்ல. மீனவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடையாது. முத்தரையர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடையாது.

ஒரு சில சமுதாயங்கள் மட்டும்தான் அனைத்து இட ஒதுக்கிடையும் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏதோ வன்னியர்களுக்கு மட்டும் நான் போராடவில்லை. 115 சமுத்தங்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஒரு சில சமுதாயங்கள் மட்டும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தான் நாங்கள் சமூக நீதி வேண்டும் என்று கேட்கிறோம்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Vanniyar Reservation 04042023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->