விவசாய பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது, விவசாயிகளின் கஷ்டங்களை தீர்க்கவும் - தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


விவசாயத்திற்கென்று தனியாக பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது, விவசாயிகளின் கஷ்டங்களை தீர்க்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இன்று திருவாரூர், மஞ்சக்குடி கிராமத்தில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அன்புமணி ராமதாஸ் எம்.பி., பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துவது, "அறுவடை நேரத்தில் 7 சென்டிமீட்டர் முதல் 8 சென்டிமீட்டர் வரை ஒரே நாளில் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கின்றது. 

ஏற்கனவே சம்பா பயிர் நடவு செய்தபோது, பெய்த கனமழை காரணமாக பயிர்கள் அழுகி அப்போதும் பலத்த சேதம் அடைந்த நிலையில், விவசாயிகளின் பெரும் உழைப்பால் பயிரிடப்பட்டு இன்று அறுவடைக்கு தயாராக இருந்த நெல், பெய்த காலம் தவறிய மழை மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பா நடவின்போது ஏற்பட்ட மழையின் பாதிப்பிற்கு, ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசின் தரப்பில் 5400 தான் வழங்கினார்கள். 

பயிர் காப்பீடு 35 ஆயிரம் ரூபாய் ஒரு ஏக்கருக்கு வழங்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்த வேளையில், 50, 60 ரூபாய் என்று காப்பீட்டுத்தொகை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.

தற்போது இரண்டு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 30000 ஏக்கரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. 

அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யும் பொழுது தமிழக அரசு ஈரப்பதத்தில் விலக்கு பெற்று, கொள்முதல் செய்ய வேண்டும் என்று, விவசாயிகளின் சார்பாக எங்களின் கோரிக்கையாக வைக்கின்றோம்.

மேலும், கடந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ஒரு ஏக்கரில் நெல் உற்பத்தி செய்வதற்கு, 46,635 ரூபாய் செலவு ஆகிறது என அறிவித்துள்ள நிலையில், உழைப்பிற்கும் சிறிது சேர்த்து 50,000 ரூபாய் இழப்பீடு அரசு வழங்க வேண்டும். 

அதேபோல இந்த பகுதிகளில் 2,10,000  ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்துப்பயிரும் தற்பொழுது பாதிப்பை சந்தித்துள்ளது. 

விவசாயத்திற்கென்று தனியாக பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது, விவசாயிகளின் கஷ்டங்களை தீர்க்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Thiruvarur paddy issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->