#Breaking: தமிழகத்திலும் கட்டளை மையங்கள் (War Room) திறப்பு..! தனியார் மருத்துவமனைகளுக்கு மு.க ஸ்டாலின் அறிவுரை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை மறுநாள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்களை காக்கும் பணிகளில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். நோய்ப்பரவலை தடுப்பது மற்றும் மக்களை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம் காண்பிக்க தொடங்கியுள்ளது. 

கட்டளை மையம் ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டளை மையங்கள் (War Room) மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செயல்பட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் பணியாக மாறியுள்ளது. 

அரசு மருத்துவமனையுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தில் மக்களுக்கு சலுகைகள் காண்பிக்க வேண்டும். மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொண்டு அரசுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டளை மையங்கள் (War Room) எனப்படுவது மருத்துவ அவசர தேவைகளுக்கு 24 மணிநேரமும் இயங்கும் மையங்கள் ஆகும். இந்த முறை கேரளா மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தகவல் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. தற்போது அவரை மருத்துவ அவசர கால நிலையை கருத்தில் கொண்டு கட்டளை மையங்களாக மாற்றப்படவுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Order Private Hospital 5 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->