அப்பா சொல்லுவாரு, நான் செய்வேன்.. மு.க. ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


கருணாநிதி தீட்டிய திட்டத்தை, செயப்படுத்தியவன் இந்த மு.க. ஸ்டாலின் என்று திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் " உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் " என்ற பெயரில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று, திருநெல்வேலியில் உள்ள வீரவநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

இதன்போது மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், " உங்களின் துன்பத்தை போக்கி, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மகத்தான திட்டம் தான் "உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்". இன்னும் 3 மாதங்களில் உங்களின் துன்பம் நீங்கப்போகிறது. அரசியல் என்பது அப்பாவி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பது தான். 

அடிப்படை பிரச்சனைகள் தீராமல் மிகப்பெரிய பிரச்சனைகளை பேசினாலும் புரியாது. அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுமே இறுதியான மற்றும் முடிவான தீர்வு கிடைக்கும். மக்களின் பிரச்சனைகளுக்கு அன்றாடம் முக்கியத்துவம் தருபவன் மு.க ஸ்டாலின்.

சென்னையில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த போக்குவரத்து நெரிசலை 10 பாலங்கள் கட்டி குறைத்துள்ளோம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், மகளிர் சுயஉதவி திட்டம் எங்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. 

கருணாநிதி தீட்டிய திட்டத்தை, செயப்படுத்தியவன் இந்த மு.க. ஸ்டாலின். மக்களுக்கான பணிகளை செய்கையில், மேலும் புகார்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் என் மீது தொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக தலைமை காவல் அதிகாரியை சந்திக்க செல்கையில், டி.ஜி.பி எனக்கு புறப்பட்டு சென்ற தருணமும் உள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Election Campaign at Tirunelveli 6 Feb 2021 Speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->