திமுக - அமமுக மோதல்.. மிளகாய்பொடி தாக்குதல்.. பரபரப்பு சூழ்நிலையால் காவல்துறை குவிப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக - அமமுக கட்சியினர் மிளகாய்பொடி தூவி தாக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாவது கட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 55 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள போரூர் கெருகம்பாக்கம் இந்திரா நகரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில், திமுக - அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் முதலில் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்துள்ளது. 

இதன்போது, திடீரென இருதரப்பினரும் மிளகாய்பொடியை கொண்டு வந்து மாறி மாறி தாக்குதலில் ஈடுபடவே, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பரபரப்பான சூழ்நிலையில் மோதலில் ஈடுபட்டதில், இருதரப்பிலும் சேர்ந்து 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK AMMK Supporters Clash Chennai Porur Gerugambakkam Local body Election 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal