சாதி பெயர் சொல்லி தூய்மை பணியாளரை தாக்கிய திமுக நிர்வாகி மீது வழக்கு..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தை அடுத்த ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சியில் சேர்மானாக திமுகவை சேர்ந்த சுதா என்பவர் இருந்து வருகிறார். திமுக நிர்வாகியான அவரது கணவர் மோகன் லால் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஆலங்குளம் பேரூராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் புதுப்பட்டி பறம்பு பகுதியில் தூய்மை பணியாளர்கள் நீண்ட நாட்களாக கொட்டி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் இசக்கிமுத்து, அஜித்குமார் இருவரும் கடந்த திங்கள்கிழமை இரவு மார்க்கெட் பகுதியில் சேகரித்த குப்பைகளை கொட்டுவதற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் கணவர் மோகன்லால் எதிரில் வந்த இசக்கிமுத்துவை ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதோடு அவரை சராசரியாக தாக்கினார். மேலும் தூய்மை பணியாளர்களிடம் இருந்த செல்போனை பறித்து துரத்தி விட்டுள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் வேலை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் திமுக நிர்வாகி மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin assaulted cleanliness workers by caste name


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal