முதல்வருக்கே விபூதி அடித்த மாற்றுத்திறனாளி.."களத்தில் இறங்கிய உளவுத்துறை".. வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் பாபு என்ற மாற்றுத்திறனாளி கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சந்தித்து கஷ்டப்படுவதால் அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொகுதிக்குட்பட்ட மேல செல்வனூரை சேர்ந்த வினோத் பாபு அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி அளிக்கும்படி உதவி கேட்டுள்ளார். இதனால் அமைச்சரும் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமைச்சருடன் சென்னை சென்ற வினோத் பாபு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து லண்டனில் நடந்த போட்டியில் வென்றதாக கூறி வாழ்த்து பெற்றுள்ளார். இந்த நிலையில் வினோத் பாபு கூறியதில் உண்மைதன்மை இல்லை என அறிந்த உளவுத்துறையினர் விசாரணையில் இறங்கினர். 

வெளிநாடு சென்று விளையாட்டு போட்டிகளில் வென்றதாக கூறிய வினோத் பாபு எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என்பதும், அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் உளத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இது குறித்தான விசாரணை அறிக்கையை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ளனர்.

பாஸ்போர்ட் கூட இல்லாமல் வெளிநாடு சென்று விளையாடி கோப்பை வென்றதாக கூரி முதலமைச்சருக்கே விபூதி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வினோத் பாபுவிடம் கேட்ட போது "பாரா ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியிலும், மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வீல்சேர் கிரிக்கெட்டில் கேப்டனாக விளையாடினேன். வெளிநாட்டிற்கு சென்று விளையாடி வென்றதாக தவறாக கூறிவிட்டேன். சுய முயற்சியில் முதல்வர் மற்றும் அமைச்சரை சந்தித்து அரசு பணி வழங்க கோரிக்கை வைத்தேன். மற்றபடி யாரையும் ஏமாற்றும் நோக்கத்தில் அவ்வாறு கூறவில்லை'' என மழுப்பலான கதையை கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disabled person cheated CM Stalin he won World Cup


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->