மாஸ்க்கையும் வாங்கிட்டு, அதிகாரிகளுக்கு எதிராக தர்ணா.. காவல்துறை வந்ததும் தலைதெறிக்க தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


வேடசந்தூரில் முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் சுகாதாரத்துறையினர் விதித்த அபராதத் தொகை வழங்க மறுத்து, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதியில் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், முககவசம் அணியாமல் வந்து இருக்கிறார்.

அவரை மடக்கி நிறுத்திய அதிகாரிகள் ரூபாய் 200 அபராதம் விதித்து முகக்கவசம் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அபராதத்தை கட்ட மறுத்த இளைஞர், அதிகாரிகள் வழங்கிய முகக்கவசத்தையே போட்டுகொண்டு சுகாதாரத்துறையினர் இலஞ்சம் வாங்குவதாக கூறி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

மேலும், அந்த இளைஞருக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் குரல் கொடுத்து வரவே, ஆத்திரமடைந்த வட்டார மருத்துவ அலுவலர் பொன். மகேஸ்வரி, உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக பணியாற்றி வரும் எங்களை இலஞ்சம் வாங்குவதாக கூறுவதா? என பொங்கி எழுந்தார். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வருவதை அறிந்த இளைஞர், அங்கிருந்து தந்திரமாகத் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Vedasandur Youngster Make Trouble to Govt Officials 22 March 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->