எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் தினகரன்?! வெளியான அதிர்ச்சி தகவல்!!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் அமமுக கட்சியின் மூலம் இந்த தேர்தலை சந்திக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தாலும் தினகரன் அதிமுகவை எதிர்ப்பதை விட திமுகவையே அதிகம் எதிர்த்து வருகிறார் காரணம். அதிமுகவின் வாக்கு வங்கியை பெறுவது கடினம். ஆனால் திமுகவின் வாக்கு வங்கியை எளிதாக பணத்தை வைத்து கைப்பற்றி விடலாம் என்பதே. 

ஏற்கனவே, ஆர் கே நகரில் இப்படித்தான் திமுகவின் டெபாசிட் காலியானது. இந்நிலையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோக்களை பிரச்சார இடங்களிலும், கொடியிலும் வைத்துக்கொண்டு தினகரனும், அவரது வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Image result for இரட்டை இல்லை seithipunal

ஆனால், தமிழக மக்களை பொறுத்தவரை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோவைப் பார்த்தாலே இரட்டை இலை சின்னம் தான் என முடிவு செய்துவிடுகின்றனர். இவர்களது புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் தினகரனுக்கு அது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் தினகரனின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வரும் இடத்தில், "பொதுமக்கள் கவலை வேண்டாம் நாங்கள் நிச்சயம் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுகிறோம்" என கூறுகின்றனர்.

ஆறுதல் அளிப்பது போல இந்த வார்த்தையை கூறும் இந்த வார்த்தையோ வாக்காளருக்கு ஆறுதல் அளிக்காமல் அதிர்ச்சியை தான் அளிக்கிறது. இதுபோல திருச்சியில் போட்டியிடும், சாருபாலா தொண்டைமான் புதுக்கோட்டை பகுதிகளில் வாக்கு கேட்ட பொழுது, "எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு தான்" என தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். 

இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பின்னர் மக்களுக்கு புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அங்கு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தான் போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னம் வாக்கு இயந்திரத்திலேயே இடம்பெற்றிருக்காது. இரட்டை இலையை மக்கள் தேடி கொண்டிருப்பார் என்பதுதான் வேடிக்கை. இது ஒரு விதத்தில் சாருபாலாவிற்கு நிம்மதி அளிப்பதாக இருக்கிறது. 

சில நாட்கள் முன்பு, இதுபோலவே தேனியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரு டீ கடையில் நடந்த சம்பவம் மறக்க முடியாதது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைத்து கொண்டு வாக்கு கேட்டால் அமமுகவினரின் உழைப்பு மொத்தமும் அதிமுகவிற்கு செல்லும் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை புறக்கணிக்க நினைப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran may be ignore jeyalalitha mgr photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->