குரலைக்கூட உயர்த்தி பேசாத பண்பான வேட்பாளர்... தர்மபுரியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக வந்துள்ள எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " எனக்கு மிகவும் பிடித்த மண் இந்த மண். எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் தர்மபுரி மாவட்டம். எழுச்சியோடு, வீரத்தோடு இருக்கும் என்னுடைய தம்பிகள், தங்கைகள், சகோதரிகள், தாய்மார்கள், அண்ணன்கள் நிறைந்துள்ள பகுதி இது. உங்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருவருடம் கழித்து உங்களை சந்தித்துள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது தேர்தல் பிரச்சார கூட்டம் கிடையாது. இது தேர்தல் மாநாடு. 

இந்த தேர்தலில் அதிமுக வெற்றி கூட்டணியில் பாமகவின் வெற்றி வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மிகவும் எளிமையானவர். யாரிடமும் குரல் உயர்த்திகூட பேசமாட்டார். எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, இன்று உங்களுக்காக எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறார். நீங்கள் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். 

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி அவர்களுக்கு ஆதரவளித்து அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவர்கள் வெற்றியடைந்தால் தமிழக முதல்வராக விவசாயி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மீண்டும் வருவார். இந்த கூட்டத்திற்கு தலைமை தங்கியுள்ள அதிமுக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், த.மா.கா நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கும், எனது தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும், அண்ணன்களுக்கு அன்புமணியின் அன்பு வணக்கம். 

நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி. நமது மருத்துவர் இராமதாஸ் சமூக நீதி அடிப்படையில் கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும், ஒரு விவசாயி முதல்வராக வந்துள்ளார். அவர் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாம் அனைவரும் விவசாய பெருமக்கள். மக்கள் இதனை நினைத்து பார்க்க வேண்டும். நமது முதல்வர் மிகவும் எளிமையானவர். நமது வேட்பாளர் யாரிடமும், எங்கும் தகராறுக்கு சென்றதில்லை. இனிமையான, பண்புள்ள வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Dr Anbumani Ramadoss Election Campaign 26 March 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->