தருமபுரியில் மூன்று பேரை பலி வாங்கிய கார்..இருசக்கர வாகன விபத்து! - Seithipunal
Seithipunal


தருமபுரி பாலக்கோடு அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் பாலவாடியை அடுத்த கானாப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பச்சை (70), முனுசாமி (65), மணி (63). இவர்கள் மூன்று பேரும் பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளியல்லா அணையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் ஈமச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தங்கள் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஈமச் சடங்கு முடிந்த பிறகு, மூவரும் மீண்டும் அதே இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். அப்போது தருமபுரி - ஓசூர் நெடுஞ்சாலையில் உள்ள அணுகுசாலையில் செல்வதற்காக எதிர்ப்புறமாக சென்றபோது, ஓசூர் நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பச்சை உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமைடைந்த முனுசாமி, மணி ஆகிய இருவரையும் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri car bike accident 3 person Died


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->