கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதமும் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees not allowed to chaturagiri temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->