கோலாகலமாக நடைபெறும் தசரா திருவிழா - குலசையில் குவியும் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

இந்தத் திருவிழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, சொந்த ஊரில் உள்ள கோயில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து அம்மனை வழிபட்டு வருவதுடன், சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகன், ராமர், லட்சுமணன், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட சுவாமி வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர். 

அதே சமயம் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டி உள்ளது. தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர்.

வருகிற 24-ஆம் தேதி 10ம் நாள் அன்று இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees come to mutharamman temple for dasara festival


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->