சென்னை : அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


சென்னையில், அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் பல ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததுபடி, இந்தப் பணிகள் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், 116 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக 25 ரயில் நிலையங்களிலும், இரண்டாவது கட்டமாக 44 ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 7 ரயில் நிலையங்களில் நடைபாதைகள், பொதுமக்கள் தகவல் அறைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.சில இடங்களில் நடைமேம்பாலங்கள், மின்தூக்கிகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை மார்க்கம்:   பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை ஆகிய 6 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களிலும் பணிகள் நடக்கின்றன.

பல்வேறு ரயில் நிலையங்களில், மின்தூக்கி வசதி, பார்க்கிங் வசதி, மற்றும் கட்டுமானங்கள் உட்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 

திரிசூலம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த மாதம் 30-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான ரயில் நிலையங்களில் 50% பணிகள் முடிவடைந்துள்ளன; சில இடங்களில் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Development work of Amrit Bharat project in Chennai Kota railway stations is intensive


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->