கும்பகோணம் மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்.!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும்  உயர்ந்து கொண்டே வருகிறது. 

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு இருபத்து நான்கு மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரைக்கும் இங்கு காய்ச்சல் காரணமாக 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கும்பகோணம், வேப்பத்தூர், நாச்சியார்கோவில், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் அரியலூர் மாவட்டம் குழவடையான் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மருத்துவமனையில் இவர்கள் 6 பேருக்கும் தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengue fever confirmed six peoples in kumbakonam government hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->