மான்களை வேட்டையாடும் நாய்கள்! விரைவில் கணக்கெடுப்பு! - Seithipunal
Seithipunal


அடர்ந்த வனம், கண்மாய் பகுதிகள் நிறைந்து காணப்படும், இராமநாதபுரம் மாவட்டத்தில், மான்கள் தொடர்ந்து விபத்தில் பலியாகியும், நாய்கள் கடித்தும் இறக்கிறது. குறிப்பாக மான்கள் தண்ணீர் குடிக்க செல்லும் போது தான் இந்த மாதிரியான இறப்புகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோடை காலத்தில் அப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் மான்கள் அவ்வப்போது ஊருணிகள், கண்மாய்களை தேடி நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்கின்றன. அப்போது அந்த வழியாக வரும் வாகனத்தில் சிக்கி பலியாக அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், ஊருக்குள் செல்லும் போது நாய்கள் கடித்து இறக்கிறது‌.

கமுதி, பரமக்குடி, சாயல்குடி, தொண்டி, மண்டபம், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சீமகருவேல மரங்கள் உள்ளது. இங்கு அதிகளவில் புள்ளி மான்கள் வாழ்கின்றன. ஆண்டுதோறும், மான்களின் இறப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

கடந்த 2021ல் மட்டும் சுமார் 26 புள்ளி மான்கள் இறந்துள்ளன. தற்போது மான்கள் இறப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

(இந்த செய்தியில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும், எடுத்துக்காட்டுக்காக காண்பிக்கப்பட்டுள்ளது)


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deer Continuesly Dies By accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->