தீபாவளி எதிரொலி - தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். 

அப்படி செல்பவர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தங்களது பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்தது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதாவது, வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,365 பேருந்துகள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக உள்ளன. இந்தச் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். 

இதுவரைக்கும், 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali special buses run from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->