குடும்பத்தை நம்பவைக்க கர்ப்ப நாடகம்.. இறுதியில் கடத்தல்..! நெஞ்சை உருக்கி பதறவைக்கும் பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


பெண்மணி ஒருவர் குடும்பத்தினரை கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைத்து, குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி அருகேயுள்ள விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்த தினத்தில் மாலை 4 மணியின் போது, அந்த குழந்தையை மணிகண்டனின் தாயார் மருத்துவமனையில் உள்ள கோவிலில் வைத்து வழிபட கேட்பதாக, சில மணிநேரம் முன்னர் அறிமுகமான பெண்மணி கேட்டுள்ளார். இதனை நம்பி பாக்யலட்சுமியும் குழந்தையை கொடுக்கவே, நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பாக்கியலட்சுமி, அக்கம் பக்கத்தில் விசாரிக்கவே, மருத்துவமனைக்கு அருகாமையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்ததில், பெண் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி கடலூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக பெண்மணியை தேடி வந்தனர். விசாரணையில், கடலூரை அடுத்துள்ள டீ.குமாரபுரம் பகுதியைச் சார்ந்த சிலம்பரசன் என்பவரின் மனைவி நர்மதா குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நர்மதாவை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

குழந்தை கடத்தப்பட்ட 3 மணிநேரத்திற்குள், காவல் துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். நர்மதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், " நானும், எனது கணவர் சிலம்பரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த இரண்டு வருடமாக எங்களுக்கு குழந்தை இல்லை. இரண்டு முறை கர்ப்பம் கலைந்ததால், நானும் என் கணவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தோம். 

மூன்றாவது முறையாக கருத்தரித்து கரு கலைந்ததால், கர்ப்பம் கலைந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் குடும்பத்தினருக்காக கர்ப்பமாக இருப்பதாக நடிக்கத் தொடங்கினேன். இதனை என் வீட்டில் உள்ளவர்களும், என் கணவர் வீட்டாரும் நம்பினார்கள். 5 மாதத்தில் வளைகாப்பு நடத்தி மற்றொரு ஊருக்கு சென்றாலும், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உரித்தான வயிறு வீக்கம் இல்லை என்று பலரும் சந்தேகமாக கேட்டு வந்தனர். 

பத்து மாதம் ஆகிவிட்டதால் குழந்தை எங்கே என்று கேட்டால்?, என்ன சொல்வது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. இதனால் குழந்தையை கடத்த திட்டமிட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த பாக்கியலட்சுமி மற்றும் அவரது மாமியாரிடம் நன்றாக பேசி, பாக்கியலட்சுமி தனியாக இருந்தபோது மாமியார் குழந்தையை கேட்பதாக வாங்கி சென்றேன் " என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து நர்மதாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore woman Kidnap New Born Child girl Police Arrest and Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->