கடலூர் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் ஆதிவராகநத்தத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்த சீதா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார்.

காதல் திருமணம் செய்த சரவணனே குடும்பத்தினருடன் சேர்ந்து காதல் மனைவி சீதாவை கொலை செய்து உடலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

காதலி சீதாவை திருமணம் செய்ததற்கு சரவணன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சீதா கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சரவணன், அவரது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படதால் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore spl court order double life time prison in murder case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->