தொட்டுப்பார்.. நீயா? நானா?.. போட்டா போட்டியில், வாய்க்காலுக்குள் டைவ்.. நீச்சல் பழகிய லாரி.! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்துகள் பல மாவட்டங்களில் உள்ளூர் சேவைகளையும், மாவட்டங்களுக்கு இடையேயான சேவைகளிலும் பிரதான சேவையாக இயங்கி வருகிறது. மேலும், அரசு பேருந்தை விட குறைவான கட்டணங்களை வாங்கும் இந்த தனியார் பேருந்துகள், கொள்ளை லாபம் என்ற பிரச்சனை இல்லாமல், அசுர வேகத்தில் இயங்கி வருவது தான் இதன் ஆபத்தாகவும் இருக்கிறது. 

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் நிலையில், அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் பெரும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறாக பல விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதனை பற்றியும் கவலைப்படாது போட்டா போட்டி போட்டுக்கொண்டு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரத்தில் இருந்து புறப்பட்ட கணேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. 

இந்த சாலையில் பேருந்துக்கு முன்புறம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், லாரியை முந்தி செல்ல முயன்று உள்ளது. இந்நிலையில், அந்த சாலையில் வேகமாக சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தும், லாரியும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு செல்லவே, ஒரு சமயத்தில் லாரி விபத்திற்குள்ளாவது போல பயணித்து அருகில் உள்ள வாய்க்காலிற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் நல்லவேளையாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், ஓட்டுநர் லேசான காயத்துடன் தப்பித்தார். ஏற்கனவே தனியார் பேருந்துகளின் அசுர வேகம் மற்றும் போட்டா போட்டி குறித்து பல குற்றசாட்டுகள் இருந்தாலும், பேருந்துகளின் வேகம் இன்று வரை குறைந்தபாடில்லை என்று வருத்தம் உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Private Bus and Lorry Race Lorry Jumped Village Water Drain Line


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->