தமிழில் சாமி பட வசனம் பேசிய துபே - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் போட்டியிடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷிவம் துபே, நடப்பு சீசனிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். இதற்கு முன்பு பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் விளையாடிய இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. 

பின்னர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் சி.எஸ்.கே. அணிக்கு வந்த அவர் சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை "ஆறுச்சாமி" என்றே அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபே, தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் வரும் " ஒரு சாமி, இரண்டு சாமி....ஆறுச்சாமி" என்ற வசனத்தை தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player shivam dube speech sami movie dialogue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->