கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை..! - Seithipunal
Seithipunal


கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் ரெயில் மூலம் கோவைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2 ஆம் அலை தொடங்கியது. இதில் பல இலட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாயினர். இந்த இரண்டாம் அலை கோயம்புத்தூர் மாவட்டத்தை அதிக அளவில் பாதித்தது. கோவை தொழில் நகரம் என்பதால் அங்கு பணிபுரியும் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளதாலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததாலும், கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மீண்டும் கோவையை நோக்கி வர தொடங்கினர். இதற்கிடையில் கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்: வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவல் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்கள் மூலம் வருபவர்களின் உடல் வெப்பநிலை மற்றும் சளி மாதிரிகள் பரிசோதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 2500 வெளிமாநிலத்தவருக்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid test in Coimbatore Railway station for passenger


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->