கொரோனா சோதனைக்கு ஆதார் கட்டாயம்.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி ஆணையம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், சென்னையில் உள்ள தனியார் பரிசோதனை மையங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், தனியார் பரிசோதனை மையத்திற்கு கரோனா பரிசோதனை செய்ய வரும் நபர்களின் விபரங்கள் கட்டாயம் சேகரிக்கப்பட்ட வேண்டும். அவர்களின் அலைபேசி எண், தற்போதைய இருப்பிடம், முக்கியமாக ஆதார் குறித்த தகவலும் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. 

இதில் கொரோனா உறுதியான நபர்கள் மற்றும் சோதனைக்கு உட்படுத்திய நபர்கள் குறித்த விபரங்கள் தனியார் பரிசோதனை மையத்தில் சரி வர சேகரிக்கப்படாத காரணத்தால், பாதித்த நபரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது என்பதால், சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் விபரங்கள் மற்றும் ஆதார்கார்டு விபரங்கள் கட்டாயம் சரிவர சேகரிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus test person Aadhar card Chennai corporation announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal