தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை.. தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனை.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்தை உலக நாடுகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

சமீபத்தில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாகியுள்ளதாக புனேவை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக்  நிறுவனம் அறிவித்தது. இந்த நிறுவனம், இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

"கோவேக்சின்" என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி சோதனை நடைபெற்றது. 

அதில், தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மட்டும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு என்று தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. சோதனை முடிவுகள் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine test in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->