"12 மணி நேர வேலை சட்டம் மசோதா".. ஏப்ரல் 24ல் அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக கூட்டணி கட்சிகள் மத்திய பாஜக அரசு கொண்டுவர நினைத்த 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை முதலில் எதிர்த்த திமுக தற்போது ஏன் கொண்டு வந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தொழிற்சங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலை சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும் ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்து தற்பொழுது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கி கூறி இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெரும் வேலை வாய்ப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் அவர்களும், தொழில்துறை அமைச்சர் அவர்களும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

இருப்பினும் இந்த மசோதா குறித்து தொழிலாளர்கள் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வரும் 24-04-2023 திங்கட்கிழமை அன்று மதியம் 3:00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது" என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Consultation meeting for 12Hours Work Act Bill on Apr24


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->