சென்னையில் திடீர் பதற்றம்.. காங்கிரஸ் கட்சியினர் மீது அதிரடி காட்டிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ, வார்டு உறுப்பினர்கள் என 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்கள் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷம் எழுப்பியவாறு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் காங்கிரஸ் கட்சியினரை தடுத்தனர். இதனால் அவர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது போலீசார் உடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால் எழும்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலோடு, காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். காங்கிரஸ் கட்சியினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress members arrested in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->