சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம் - காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் சமூக நீதி அடிப்படையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;-  "கடந்த முறை சிறுபான்மை மக்களுக்கு தொகுதி ஒதுக்காமல் விடுபட்டுவிட்டது. இந்த முறை சிறுபான்மையினருக்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். 

அதன்படி கிறிஸ்தவருக்கு கொடுத்திருக்கிறோம். இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்ட தொகுதி அமையவில்லை. எங்கள் இந்தியா கூட்டணியில் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். 

அவரும் எங்களுடைய வேட்பாளர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர். ஏற்கனவே வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராக அசன் இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்குமான இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான். சமூக நீதி அடிப்படையிலேயே எங்கள் வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader selva perunthagai press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->