கொடைக்கானல் || மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் இருபது பேர், வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்கள் டால்பின் நோஸ் பாறைக்குச் சென்றுள்ளனர். 

அங்கு, அவர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில், மாணவர்களில் ஒருவரான பிரதாப் என்பவர் டால்பின் நோஸ் பாறையின் நுனிப்பகுதியில் நிற்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து, அங்கிருந்து மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டார். 

உடனே தன்னைக் காப்பாற்றும் படி கத்திக் கூச்சலிட்டார். இவருடைய சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த சக மாணவர்கள், உடனடியாக வனத்துறையினர், போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர்.

அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகும் என்று நினைத்த சக மாணவர்கள், தாங்களே காலத்தில் இறங்கி நண்பனை மீட்க முடிவு செய்து, பள்ளத்தாக்கில் இறங்கி மரத்தில் சிக்கியிருந்த நண்பன் பிரதாப்பை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பள்ளத்தில் விழுந்ததில் காயம் அடைந்திருந்த நண்பனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sliped valley in kodaikanal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->