தூக்கில் தொங்கிய மாணவி.. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவியின் அறையில் மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றிய போலீசார் காதல் தோல்வியால் இந்த முடிவை மேற்கொண்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தை அடுத்த கருப்பூரில்இயங்கி வரும் பெரியார் பல்கலைகழகத்தில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நிவேதாவுடன் விடுதி அறையில் தங்கி இருந்த இரு மாணவிகள் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர் நிலையில். விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி நிவேதாவின் அறை கடந்த 10 ஆம் தேதி முதல் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது

இதையடுத்து, நேற்று மதியம் பக்கத்து அறையில் தங்கியிருந்த மாணவிகள் சந்தேகப்பட்டு நிவேதாவின் அறையையே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது உள்ளே நிவேதா மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

இது தொடர்பாக தகவலறிந்து வந்த கருப்பூர் போலீசார், அந்த அறையின் கதவை உடைத்து திறந்து நிவேதாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிவேதாவின் அறையில் காவல்துறை சோதனையிட்டதில், மூன்று பக்க கடிதம், டைரி மற்றும் காதல் சின்னத்துடன் கூடிய பொருட்கள் சிக்கின. எனவே மாணவி நிவேதா காதல் தோல்வியால் தற்கொலையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி நிவேதாவின் தற்கொலையால், விடுதியில் மற்ற மாணவிகளும், மாணவர்களும் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரியார் பல்கலைக்கழக விடுதிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college second year student attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->