திமுகவினர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..! - Seithipunal
Seithipunal


திமுகவினர் கோவை மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக சார்பில் கிராம சபை கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை நடத்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், அரசியல் ரீதியாக நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள் இனி நடத்த அனுமதி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. 

இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசின் உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியிலும் திமுக சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த விஷயத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு தெரிவிக்கவே, முன்கூட்டியே காவல் துறை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் போராட்டம் நடத்த துவங்கினர். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில், 300 பேர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை ஆணையர் சார்பில் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல் போராட்டம் திமுக சார்பில் நடைபெற்றுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore DMK Protest Coimbatore SP Office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->