கோவை கார் வெடிவிபத்து: மீண்டும் சென்னையில் 4 இடங்களில் சோதனை.! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடி விபத்து தொடர்பாக சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் 23-ந்தேதி கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் ஜமோசா முபின் உயிரிழந்தார். இது காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore car blast accident connection with 4 places in Chennai were searched again


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->