#வேலூர் | கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (CMC) மாணவர்களை ராகிங் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் பிரபல கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி (சிஎம்சி) கல்லூரியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "சீனியர் மாணவர்கள் எங்களை அரை நிர்வாணப்படுத்தி, விடுதியின் வளாகத்தை சுற்றிலும் ஓடவிட்டு, எங்கள் மீது தண்ணீர் பாய்ச்சி ராகிங் செய்துள்ளனர்" என்று, ஜூனியர் மாணவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் ஏழு பேர் தற்போது, இந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள ராகின் தடுப்பு துறைக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இது சம்மந்தமாக தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று சிஎம்சி கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராகிங் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கல்லூரியில் இருந்து அந்த 7 மாணவர்களும் நீக்கப்படுவார்கள்" என்று விளக்கமளித்தார்.

அப்போது நீதிபதிகள், "சிஎம்சி-யில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை. மாணவர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று சிஎம்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CMC Ragging Case Chennai HC


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->