இனி ரூ.8,000!  5,035 பேருக்கு இலவச பட்டா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.

கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது. 

நாட்டுப்படகு மீனவர்களுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது. 

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இனி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும். 

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம். ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது" என்று முக ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin announce for fisher man


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->