#வாணியம்பாடி || டெங்கு காய்ச்சலுக்கு 8ம் வகுப்பு மாணவன் பலி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. கொசுக்களின் மூலம் பரவும் நோய்த் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் பயின்று வந்த 8ம் வகுப்பு மாணவர் கோபிநாத் என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவர் அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Class 8 student died of dengue fever in vaniyambadi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->