பந்தி பரிமாறுவதில் தாமதம் -  திருமண வீட்டில் இரு தரப்பினருக்கிடையே மோதல்.!! - Seithipunal
Seithipunal


பந்தி பரிமாறுவதில் தாமதம் -  திருமண வீட்டில் இரு தரப்பினருக்கிடையே மோதல்.!!

தூத்துக்குடியில் உடையார்குளம் அருகே காந்தி நகரைச் சேர்ந்த பொன் பெருமாள் என்பவரின் சகோதரி மகனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மாநகரின் வீட்டிற்கு அருகில் பிரமாண்டமாக அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால், பந்தி பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சத்தம் போட்டுள்ளனர். 

அவர்களை பொன் பெருமாள் சமாதானம் செய்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சவரிமுத்து மகன் சந்தியாகுராஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முடிவடைந்து மீண்டும் பந்தி பரிமாறப்பட்டது. அதன் படி சந்தியாகுராஜ், நண்பர் இசக்கிமுத்துவுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில், பொன்பெருமாள், அவருடைய மகன் முத்தார், உறவினர்களான அருண், இசக்கிமுத்து, தங்கராஜ் உள்ளிட்டோர் சாப்பிட சென்றனர். அப்போது பொன்பெருமாள் தரப்பினருக்கும், சந்தியாகுராஜ் தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.

இதில், ஆத்திரமடைந்த பொன்பெருமாள் தரப்பினர், சந்தியாகுராஜ் நண்பர் இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்துவை அங்கு இருந்தவர்கள் உடனே மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால், சந்தியாகுராஜ், அவருடைய சகோதரர்கள் பண்டாரம், இருதயம், மைக்கேல், பாக்கியம், ஆரோக்கியம் மகன் இசக்கிமுத்து உள்ளிட்ட ஆறு பேருடன் பொன் பெருமாள் வீட்டிற்கு சென்று, தன் நண்பரை வெட்டிய அத்திரத்தில் பொன்பொருமாளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த பொன்பெருமாள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், சந்தியாகுராஜ், பொன்பெருமாள் உள்பட 11 பேர் மீது நாசரேத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clash of two gangs at marriage functionin thoothukudi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->