வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.! - Seithipunal
Seithipunal


ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு நேற்றைய தினம் 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் கடந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தோற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லை நீக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று தான் செப்டம்பர் மாதத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம். கடைசியாக பெயர் நீக்க, சேர்க்க மார்ச் 20ஆம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இறுதி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு வசதி இல்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief election commission explian name remove vote list issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->