காலதாமதத்திற்கு ரூ.500 ரூபாய் அபராதம்.! தமிழக அரசுக்கு கொட்டு வைத்த நீதிமன்றம் - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் ஆழகாரன்புலம் மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 2015 ஆம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் பள்ளி கல்வித்துறை செயலாளர் பரிசீலித்து முடிவெடுத்த வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதன் பிறகு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர் முடிவு எடுக்கவில்லை. நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக ஏற்கனவே 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் 2016 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2,148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் காலதாமதமாக வழக்கு தாக்கல் செய்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இருக்கு ரூ.500 அபராதம் விதித்ததோடு இந்த தொகையை ஒரு வாரத்திற்குள் சட்டப்பணிகள் ஆணையக் குழுவுக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC fined Rs500 to school education dept secretary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->