சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
Chennai tomorrow schools and colleges Holidays
சென்னையில் வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 4 மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கன மழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai tomorrow schools and colleges Holidays