கதிகலங்கும் சென்னை., அடுத்த 3 மணி நேரம்! வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நள்ளிரவில் பெய்த இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி கதிகலங்கி போயினர்.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai rain report oct 29


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->