ஆபத்தும், அதிவேகமாகமும் 158 புள்ளிங்கோ  மீது பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சிறப்பு வாகனத் தணிக்கையின்போது, அதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, GST சாலை, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகன தணிக்கை இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி தொடர்ந்துஅதிரடி நடவடிக்கையில் அதி வேகமாகவும், ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியதற்காக 158 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 126 நபர்கள் மீது u/s 336 மற்றும் 114 IPCன் படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 32 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் (MV Act) படி (Over Speed, Rash and Negligent Driving, Racing) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற புத்தாண்டு விபத்தில்லா நாட்களாக இருக்க வேண்டி இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை மேலும் தொடர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police case filed for speed driving


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->