#சென்னை | மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து விபத்து!  - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

தற்போது கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நெரிசல் மிகுந்த சாலை பகுதி என்பதால் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், குமணன்சாவடி பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த இரும்பு தடுப்புகளால், சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெட்ரோ ரெயில் கட்டுமான ஊழியர்கள், சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர். 

விபத்து குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், இரும்பு தடுப்புகளை சிறிய கம்பிகளில் முட்டு கொடுத்து நிறுத்தி வைப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Metro Small Accident 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->