காதலிக்கும் போது நீ போதும்.. கல்யாணத்துக்கு அப்புறம் நகை, பணம்..! அரங்கேறிய விபரீதம்.!! 
                                    
                                    
                                   Chennai Love Married girl IT Employee suicide attempt dowry problem police investigation 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் சென்னையில் உள்ள மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியை சார்ந்தவர் விக்னி நாகநந்தினி (வயது 26). பண்ரூட்டி பகுதியை சார்ந்தவர் செந்தில்நாதன் (வயது 30). இவர்கள் இருவரும் ஐ.டி ஊழியராக பணியாற்றி வருகின்றனர். 
இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலரவே, இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு பின்னர் நந்தினி தனது கணவரின் தாய் மற்றும் தங்கையுடன் மதுரவாயலில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று செந்தில்நாதன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யவே, வரதட்சணை கொடுக்க இயலாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளும்படி அவதூறாக பேசியதாக தெரியவருகிறது. 

இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்த நந்தினி, தனது வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நந்தினியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர், நாகநந்தினியின் புகாரின் அடிப்படையில் செந்தில்நாதன், செந்திலின் தாய் வசந்தகுமாரி மற்றும் செந்திலின் சகோதரி சீதாலெட்சுமி மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த மூவரும் பண்ரூட்டிக்கு சென்று தலைமறைவாகவே, செந்தில்நாதனை காவல் துறையினர் கைது செய்தனர். செந்திலின் தாய் மற்றும் சகோதரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், நாகநந்தினி கால்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Chennai Love Married girl IT Employee suicide attempt dowry problem police investigation