செல்லம்.. எல்லாம் உனக்காகத்தான்.. கணவன் கொலை வழக்கில் அதிர்ச்சி ஆடியோ ரிலீஸ்.! - Seithipunal
Seithipunal


கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் ஆண் நண்பர் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையில் முருகன் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். 

முருகனின் மனைவி லோகேஷினி, சண்முகநாதன் என்பவர் கூலிப்படையை சேர்ந்த சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் ஆகிய 6 பேரை இவ்வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், சண்முகநாதனுடன் லோகேஷினி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இது குறித்த ஆடியோவில் சண்முகநாதன் பேசுகையில், " செல்லகுட்டி என்று முதலில் ஆரம்பித்து, பக்கத்து வீட்டில் எல்லாரும் வெளியிலேயே உட்கார்ந்து இருந்தாங்க. பசங்க வந்துட்டாங்க. ஆட்கள் இருந்ததால் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை " என்று கூறுகிறார். 

இதை கேட்ட உடனே லோகேஷினியும். " எல்லாம் தெரிந்து விட்டது. கதவைத் திற என்று ஒரே கத்து. நீ தான் அவரை முடிச்சிட்டா, வாட்ச்மேன் பார்த்துவிட்டான். பின்னர் வந்து கதவை தட்ட, நான் கதவை திறந்து விட்டேன். பால்கனியை போய் பார்த்தான். அப்புறம் வந்து என்னை யாரோ கொலை செய்ய வந்ததாக சொன்னான். எதாவது ஆகிவிட்டது என்றால் நான் இறந்துவிடுவேன் " என்று கூறுகிறார். 

பதிலுக்கு ஆறுதல் கூறிய கள்ளக்காதலன் சண்முகநாதன், " ஏன் இந்த மாதிரி எல்லாம் பேசுற.. நீ என்ன பைத்தியமா?.. செல்லம் நான் சொல்றதை கேளு.. உனக்காகத்தான் நான் இதெல்லாம் செய்கிறேன் " என்று கூறியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kodambakkam Affair Murder Police Investigation Audio Released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->