டெல்லியை தொடர்ந்து சென்னை: அதிகரித்து வரும் காற்று மாசு!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு இடங்களில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாட தொடங்கிவிட்டனர். 

அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையில் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே பட்டாசுகளை வெடிக்க தொடங்கியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. 

பல்வேறு இடங்களில் காற்று மாசு தர குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளதால் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்கு சென்றுள்ளது.

சென்னை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் காற்று மாசின் தரம் 230 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெருங்குடியில் 169, வேலூரில் 123, ராயபுரத்தில் 121 ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 'காற்று மாசு அதிகாரித்துள்ளதால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். 

குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அசோகாரியம் ஏற்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai increasing air pollution


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->