அரிசிக்கடை உரிமையாளர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


அரிசிக்கடை நடத்தி வந்தவர் மர்ம கும்பலால் சாலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனி பகுதியை சார்ந்தவர் ஆனந்த ராஜ் (வயது 46). இவர் குரோம்பேட்டை சி.எல்.சி சாலையில் அரிசிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி. 

இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ண ராஜ் மற்றும் அசோக் ராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் ஆனந்த் ராஜ் கடையை திறக்க சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆனந்தராஜை சுற்றிவளைத்து இருக்கின்றனர்.

இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஆனந்த ராஜ் செய்வதறியாது திகைக்கவே, சுதாரித்து அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இவரை சாலையில் விடாமல் துரத்தி சென்ற மர்ம கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது. 

வெட்டுக்காயம் ஏற்பட்டு துடிதுடித்த ஆனந்த ராஜ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதிவாசிகள் குரோம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், ஆனந்த ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து விசாரணை செய்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Chrompet Rice Shop Owner Aanantha Raj Murder by Stranger Gang Police Investigation 19 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->