காதல் போர்வையில் அட்டூழியம்.. தொந்தவு செய்தால் கொலை தான் என காமுகன் பகிரங்க மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சார்ந்தவர் கவிதா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், " எனக்கு 17 வயது இருக்கையில், சூளைமேட்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியை சார்ந்த நந்தா (வயது 27) என்பவன் பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தான். 

முதலில் அவனது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னாளில் தொந்தரவு காரணமாக காதலை ஏற்றுக்கொண்டேன். நாங்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, கடந்த 2 வருடத்திற்கு முன்பு மாமல்லபுரத்தில் அறையெடுத்து பாலியல் பலாத்காரம் செய்தான். 

இதனைப்போல, பலமுறை என்னுடன் அத்துமீறினான். இந்நிலையில், திருமணம் செய்யாமல் என்னை விட்டு விலகி சென்று வருகிறான். இது குறித்து நான் கேட்கையில், எனக்கும் - உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விலகி செல், இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான் " என தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அகவல் துறையினர், நந்தாவின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். படிக்கும் வயதுகளில் இதுபோன்ற காமுகர்கள் பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுப்பதும், பின்னர் திடீரென மறைந்து இருந்து நோட்டமிட்டு காதல் வலையில் திரைப்பட பாணியில் வீழ்த்துவதும் தொடர்கதையாகியுள்ளது. பேனல் சுதாரித்து செயல்படுவது நல்லது. கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Choolai Medu girl Sexual abuse by Drama Love 13 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal