அதிக கட்டணம் புகார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக சுகாதாரத்துறை.!! - Seithipunal
Seithipunal


சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் பீ வெல் (Be Well) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அதிக கட்டண புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கு சிகிச்சை எடுத்ததற்கு ரூ.12 லட்சத்து இருபதாயிரம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. 

இந்த மோசடி சம்பவம் குறித்த விபரம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியாக தனியார் சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு இருந்த கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

மேலும், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரம் தெளிவாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் வேண்டும் என்றும், ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கட்டாயம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளும் அரசுடன் இணைந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைகள் மற்றும் கட்டண முறைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BE WELL Hospital corona treatment permission cancelled by Tamilnadu govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->